
மதுரையில் அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம் மதுரை கேபிள் டிவி அலுவகத்தில் நடைபெற்றது
இதில் தலைமை பொது மேலாளர் (செயலாக்கம்) ஜெயினுல்லாதீன், சென்னை மண்டல துணை மேலாளர் திரு. மாரிமுத்து மதுரை தனி வட்டாச்சியர் திரு. இளமுருகன் தொழில் நுட்ப உதவியாளர் திரு. ராஜன் ஆகியோர்களுடன் மதுரை கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் விரைவாக மாவட்டத்தில் உள்ளூர் சேனல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து பகுதிகளுக்கும் பாரத் பைப்பர் மூலம் இணைப்புகள் வழங்கப்பட்டு இன்டர்நெட் இணைப்புகளுடன் அரசு கேபிள் டிவி சிக்னல் கிராமங்களுக்கும் வழங்கப்படும் என்றும் அரசு கேபில் டிவியில் தொடர்ந்து தொழில் செய்து வரும் ஆப்ரேட்டர்களுக்கு ஆப்ரேட்டர் நல வாரியம் மின்சார கம்பங்களில் கேபிள் வயரை கட்டி செல்ல அனுமதி பெற்றுத்தரப்படும் என்றும் எஸ்.எம்.எஸ். சர்வர் பிரச்சனை காரணமாக தனியாருக்கு மாறியவர்கள் அரசு கேபிள் டிவி செட்டாப்பாக்ஸ் மீண்டும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மேலும் அரசு கேபிள் டிவி இல்லாத பகுதிகளுக்கும் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப செட்டப் பாக்ஸ் வழங்ப்படும் என்றும் குறைந்தது அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் 100 இணைப் வைத்திருப்போர்களுக்கும் நலவாரியத்தில் முன்னுறிமையளிக்கப்படும் என்றும் விரைவாக ஹெச்டி பாக்ஸ் வழங்கப்படும் என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார் மேலும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தங்களுக்குள்ள சந்தேகங்களை கேட்டு தெளிவான பதிலை பெற்று கொண்டனர்.

