
மின்வேலி அமைத்தால் கடும்தண்டனை,
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை .
தர்மபுரி மாவட்டம்
மாரண்டஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள வன பகுதிகளின் அருகில் உள்ள விளை நிலங்களில் அனுமதியின்றி மின் வேலிகள் அமைத்ததால் தொடர்ந்து காட்டுபன்றிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்து வந்தது.
இதனால் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மின்துறை, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, அதில் விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக கண்காணித்து சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும், 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மாரண்டஅள்ளி மின்வாரிய உதவி பொறியாளர் அருள்முருகன் மற்றும் பாலக்கோடு வனவர் முருகானந்தம் தலைமையில் பணியாளர்கள் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாஸ்திரமுட்லு, அத்திமுட்லு, கெண்டேயனஅள்ளி, கல்லாகரம், ஈச்சம்பள்ளம், பாறைக் கொட்டாய், காளி கவுண்டன்கொட்டாய் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு குழுவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியின்றி மின்வேலி அமைப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தண்டனைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
