
மின்சாரப் புகாருக்கு லஞ்சமின்றி உடனடி தீர்வு
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் 9498794987 என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின்இணைப்பு எண்ணை தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும். தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள்.
அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார். ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க தேவையில்லை.
ஏன்..? லைன்மேன் வாயைகூட திறந்ததில்லை. அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடுகிறது
அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சாரவாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள் .
இந்த மின்சார வாரிய சேவைமைய தொடர்பு எண் மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றிபோடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சாரவாரிய சேவைகளை பெறலாம்.
இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் ஒரு ரூபாய் கூட பணம் கேட்பதும் இல்லை.
மின்சாரவாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண்
அதாவது
TN EB CUSTOMER CARE
9498794987
