
தென்காசி மாவட்டம் சிவகிரியில் டி.எஸ்.பி., வாகனத்தில் தேர் மோதல் 6 நபர் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரியில் பழைமை வாய்ந்த கூடாரம் பாறை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த. ஆண்டு பங்குணி உத்திர திருவிழா கடந்த 26 ம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9 வது நாளான கடந்த 3 ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தேர் திருவிழாவின் போது ஒரு சமூத்தினருக்கு பாத்தியப்பட்ட மண்டபத்தின் முன்பாக தேர் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக தெருகிறது. இதனையடுத்து அந்த மண்டப முன்பு சங்கரன் கோவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுதீர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தேர் அந்த இடத்தில் நிற்க்கவில்லை. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் பொதுமக்கள் வேகமாக தேரை இழுத்து சென்றனர் அதனால் தேரோட்ட பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் வாகனத்தை தேர் இடித்து விட்டு சென்றது.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக சிவகிரி காவல் ஆய்வாளர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து மாரிகண்ணு மகன் ராம்குமார் வயது 20 மருதப்பன் மகன் கார்த்திக் வயது 29 முனியாண்டி மகன் சக்ரவர்த்தி வயது 32 மருதப்பன் மகன் முனீஸ்வரன் வயது 24 கருத்தப்பாண்டி மகன் குருசாமி வயது 31 மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
