
பொள்ளாச்சி – பாலக்காடு சாலை கோபாலபுரம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸார்.
தலைமறைவான மாவோயிஸ் ட்களை தேடும் பணியின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் தமிழக – கேரள எல்லையில் ஆயுதம் ஏந்திய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் தளம் அமைத்து செயல்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை ஒடுக்க, அம்மாநில அரசு தண்டர்போல்ட் எனும் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியது. தண்டர் போல்ட் நடத்திய தாக்குதலில், 2016-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத் தைச் சேர்ந்த குப்பு தேவராஜ், அஜீதா ஆகியோர் சுட்டுக் கொல்லப் பட்டனர். கடந்த அக்டோர்பர் 29, 30 தேதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மணிவாசகம் உட்பட 4 மாவோ யிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்ட னர். மேலும், மாவோயிஸ்ட் பயிற்சியாளர் தீபக், தமிழக அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கேரளாவின் வயநாடு பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மற்றும் மலை யாள மொழிகளில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன.
இதன்மூலமாக, கேரளாவில் செயல்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தமிழர்களும் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது.
தண்டர்போல்ட் அதிரடிப்படை யின் தாக்குதலுக்கு எதிர்வினை யாற்ற, மாவோயிஸ்ட் இயக்கத் தினர் முடிவு செய்துள்ளதாக கூறப் படும் நிலையில், தலைமறைவாக உள்ள 12 மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் இரு மாநில போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, தமிழக – கேரளா எல்லையிலுள்ள ஆனைகட்டி, வாளையாறு, வீரப் பக்கவுண்டனூர், ஜமீன் காளியா புரம், வடக்குகாடு, நடுப்புணி, கோபாலபுரம், கோவிந்தாபுரம், செமணாம்பதி, வால்பாறை , முடீஸ், சேக்கல்முடி, வழுக்குப்பாறை, வடக்கிப்பாளையம் ஆகிய இடங் களில், அந்தந்த பகுதி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தலைமையில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கோவை ஆயுதப் படையின் ஆயுதம் தாங்கிய போலீ ஸார் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.