



பாலக்கோடு காவாப்பட்டியில் மாட்டு வண்டியில் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் முனியப்பன் (வயது .20), திருமணம் ஆகாதவர், இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்,
வேலைக்கு சென்று விட்டு இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்,
சித்திரப்பட்டியில் இருந்து காவாப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது காவாப்பட்டி பிரிவு சாலையில் எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த மாட்டு வண்டியின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
தகவறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
