Police Department News

காவல்துறை குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

காவல்துறை குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு காவல்துறை குடும்ப உறுப்பினர்க ளுக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பயிற்சி துறை, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு , இந்திய தொழில் கூட்டமைப்பு, வெளிநாட்டு மனித வள நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னை, வேலூர், கோவை, ஓசூர், திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்காக மதுரை ஆகிய 6 இடங்களில் நடத்தியது.

தென்மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க், அறிவுறுத்தலின் படியும், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, வழிகாட்டுதலின் படியும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், தென்மண்டல காவல் துறையினர், சிறை துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் இன்று 25-ந் தேதியும் மற்றும் நாளை (26-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

இந்த முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதியான நபர்கள் நுழைவுப் படிவம் பெற்று வருகைப் பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

முகாமில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே இந்த வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறை துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.