
பஞ்சப்பள்ளி சொரகொரிக்கை கிராமத்தில் மின் வேலியில் சிக்கி மூதாட்டி சாவு
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சொரகொரிக்கை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜவேலுவின் மனைவி ராமு (55),
இவர் நேற்று காலை ஏரி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை, இரவு நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடினர்,அப்போது அதே பகுதியில் உள்ள பெரியமுனிராஜ் (58), என்பவரின் நெல் வயலில் மின்சார தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளது தெரிய வந்தது.
இது குறித்து அவரது கணவர் ராஜவேலு பஞ்சப்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்,
உடனடியாக பஞ்சப்பள்ளி போலீசார் ராமக்கால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மின் வேலி அமைத்த முனிராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்வேலியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
