மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மூன்று காட்டு யானைகளுக்கு 21-வது நாள் காரியம் செய்த ஊர்மக்கள்*
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 20-நாட்களுக்கு முன்பு முருகேசன் என்பவரின் விவசாய நிலத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த ஒரு பெண் யானை 2 ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் எதிர்பாராதவிதமாக விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த விபத்து கிராம பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து இன்று ஈமச்சடங்கு 21-வது நாள் காரியம் யானைகள் புதைக்கப்பட்ட குழியின் மீது பூக்களால் அலங்கரிக்கப்பட்டு யானைக்கு விருப்பமான உணவுகளான வாழைப்பழம், கரும்பு, தேங்காய், திராட்சை பழம், ஆரஞ்சு பழம், மாம்பழம் ,அன்னாசிபழம்,பலாப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.