




மாரண்டஅள்ளி அருகே சின்னபாவளி காட்டுக் கொட்டாய் கிராமத்தில் ஆடு திருடிய 3 பேர் கைது.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னபாவளி காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி காளியப்பன் (வயது.37) நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு 4 வெள்ளாடுகளை கட்டியிருந்தார் நேற்று விடியற்காலை 5 மணிக்கு பார்த்த போது வீட்டின் முன்பு கட்டியிருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 வெள்ளாடுகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.
உடனடியாக அவரது தம்பி மற்றும் குடும்பத்தினருடன் ஆடுகளை தேடி சென்றார், நல்லூர் அருகே இரு சக்கர வாகனத்தில் 3 நபர்கள் இவரது ஆடுகளை திருடி எடுத்து சென்று கொண்டிருந்தனர்,
அவர்களை பிடித்து மாரண்டஅள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரனையில் தேன்கனிகோட்டை அருகே உள்ள ஜெயபுரம் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் (வயது, 25), ராமன் (வயது .19 )மற்றும் பென்னாகரம் அருகே தாசம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் (வயது. 37) என்பதும் இவர்கள் வழக்கமாக ஆடுகளை திருடி சந்தையில் விற்று வருவதும் தெரிய வந்தது.
இவர்களிடமிருந்த 2 ஆடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த மாரண்டஅள்ளி போலீசார்,
வழக்குப்பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.
