சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை விதி முறைகளை பற்றி விழிப்புணர்வு…!
சாலையில் தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது வலது புறமாக முந்திச்செல்ல வேண்டும்.
வாகனத்தை முந்துவதற்கு முன்பாக தங்களுக்கு பின்னால் வரும் வாகனத்திற்கு சுட்டிக்காட்டி (indicator) அதன் பின்னர் முந்திச்செல்ல வேண்டும்.
முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது அந்த வாகனத்திற்கு முன்பு போதிய இடைவெளிவிட்டு செல்ல வேண்டும்.
வாகனத்தை முந்தும்போது ஒருபோதும் வேகத்தை அதிகரிக்கக்கூடாது.
சாலையில் உள்ள அறிவிப்பு பலகைகளின் அறிவிப்புகளை ஒருபோதும் காணத்தவறக்கூடாது.
சாலையில் உள்ள சந்திப்புகளில் வாகனத்தின் வேகத்தை குறைத்துக்கொள்ளவேண்டும்.
நீண்டதூர பயணத்தின் போது வாகனத்தில் இரண்டு ஓட்டுநர்கள் இருப்பது மிகவும் சிறந்தது.
வாகனத்தில் கண்கூசும் முகப்பு விளக்குகளை பொருத்துவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.