
தென்காசியில் கல்லூரி மாணவியுடன் பேராசிரியர் ஓட்டம்- போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் பிரவீன். இவரது மனைவி ராமலெட்சுமி (வயது 35). இவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ஜான் பிரவீன் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். எங்களுக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் உள்ளார். கடந்த மாதம் 21-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை கல்லூரியில் 4 நாட்கள் கேரளாவிற்கு இன்ப சுற்றுலா சென்று வந்தனர்.
தொடர்ந்து அவர் மீண்டும் 27-ந்தேதி இரவில் ஒரு சுற்றுலாவிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். தற்போது அவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என வருகிறது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் விசாரணை நடத்தினர்.
இதில் அப்பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அவர் பணிபுரிந்து வந்த அதே கல்லூரியில் பயின்று வந்துள்ளார். அவருடன் ஜான் பிரவீன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை கண்டுபிடித்து ஒப்படைக்க அவர் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜான் பிரவீனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
