Police Department News

தொடர் வழிப்பறி கும்பலை சேர்ந்த ஒருவர் கைது – 25 பவுன் நகை மீட்பு

தொடர் வழிப்பறி கும்பலை சேர்ந்த ஒருவர் கைது – 25 பவுன் நகை மீட்பு

தொடர் வழிப்பறி கும்பலை சேர்ந்த ஒருவர் கைது – 25 பவுன் நகை மீட்பு
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி.

பெரம்பலூரை சேர்ந்த ராணுவ வீரர் தனது மனைவியுடன் கடந்த மாதம் 12.03.2023 அன்று திருச்சி என் எஸ் சி போஸ் ரோடு பகுதிக்கு கைப்பையில் தங்கம் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது 27 பவுன் தங்க நகைகளை அவரது பையில் இருந்து திருடி சென்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மூன்று பேர் கூட்டாக தொடர் வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரவி என்பவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதம் 2 பெண்களை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 43 குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது அதில் 35 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

திருச்சி மாநகரில் 2000 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே உள்ள 1600 கண்காணிப்பு கேமராவில் அதிக அளவில் செயல்படாமல் உள்ளது. பைக் வீலிங் செய்யும் இளைஞர்களிடம் தொடர்ந்து அவர்களை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து ஆலோசனைகளையும் அறிவுரைகளும் பெற்றோர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பைக் வீலிங் முழுவதும் மாநகரில் இல்லாத நிலை உருவாக்கப்படும். 20 பவுனுக்காக ஆள் கடத்தல் நடந்த சம்பவத்தில் கடத்தல் தங்கம் எவ்வளவு என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஐந்து பேரை தேடி வருவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.