
முன்னாள் டி.ஜி.பி. ரங்கசாமி மரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் டி.ஜி.பி. ரங்கசாமி மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். மாநிலக் காவல்துறையைச் சிறப்பாக வழிநடத்திய அவரது திறன் காவல்துறையினரால் என்றென்றும் நினைவுகூரப்படும். ரங்கசாமியின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
