
ஆன்லைன் ரம்மி தடை- களமிறங்கிய காவல் துறை
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை அமலுக்கு வந்தது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது.
தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறிய காவல்துறை திட்டம் வகுக்கிறது.
முதற்கட்டமாக சென்னை சைபர் க்ரைம் காவல்துறை ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியது.
ஆன்லைன் கேம் பட்டியல்களை தயாரித்து சம்பந்தப்பட்ட, செயலி மற்றும் இணையதள நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது
