திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே விவசாயி வீடு புகுந்து 16 பவுன் நகை திருட்டு
கொடைக்கானல் அருகே கூக்கால் கிராமத்தை சேர்ந்த வர் பார்த்திபன் (வயது35). விவசாயி. இவர் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இவரது மனைவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். வீடு திரும்பிய அவரது மனைவி பொரு ட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மாயமானது தெரிய வந்தது.
இது குறித்து கொடை க்கானல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால்ஜெயசீலன் தலைமை யிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.