Police Department News

தென்காசி மாவட்டம் கடையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசி மாவட்டம் கடையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசி மாவட்டம் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலை ஓரத்தில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமுத்திரகனி, வசந்த், காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஜெய சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டார்.இதில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் பணித்தள பொறுப்பாளர்கள் ரஞ்சித் ராணி, அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.