வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி
வீட்டில் இருக்கும் தங்களது குழந்தைகளின் ஓவியத்திறமையினை கொண்டு கொரோனாவினை எதிர்க்கலாம். ஒரு A4 தாளில் “கொரோனாவிற்கு எதிரான போர்” என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்து ஏப்ரல் 26-ம் தேதிக்குள் எங்களுக்கு புகைப்படம் எடுத்து சுயவிவரங்களுடன் அனுப்பி வையுங்கள். சிறந்த ஓவியம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 29-ம் தேதி பதிவிடப்படும். ஓவியங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி tnpcontest@gmail.com.
மேலும் உங்களது குழந்தையின் பெயரை இந்த பதிவில் கமெண்டாக பதிவு செய்யவும்.
வயது வரம்பு : 3 முதல் 10 வரை
கடைசி தேதி: ஏப்ரல் 29¸ 2020