பாலக்கோடு அருகே கொண்டசாமனஅள்ளி கிராமத்தில் குடிக்க பணம் தராததால் கொடுவாளால் மனைவியை வெட்டிய கணவன்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொண்டசாமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மார்கண்டன் (வயது.40) இவரது மனைவி விஜயா (வயது.32) இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
மார்கண்டன் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், இன்று அதிகாலை மது போதையில் இருந்தவர் மீண்டும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் மனைவி பணம் தர மறுத்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது, அப்போது மார்கண்டன் வீட்டில் இருந்த கொடுவாளால் மனைவியின் முகம் , முதுகு, கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்,
விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசுமருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மார்கண்டனை தேடி வருகின்றனர்.
குடிக்க பணம் தராததால் மனைவியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.