மதுரையில் பீர்பாட்டிலால் வாலிபர் மீது தாக்குதல்
கீழகள்ளந்திரியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் ராஜீவ் காந்தி (36). இவர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். மதுரை ஆண்டார் கொட்டாரம், அய்யனார் நகரை சேர்ந்தவர் பிரதீப் குமார் (46). இவருக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பாண்டிகோவில் ரோட்டில் உள்ள பாரில் ராஜீவ் காந்தி, பிரதீப் குமார் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் குமார் தகராறு செய்து, பீர் பாட்டிலால் ராஜீவ் காந்தியை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனர்.