ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நடத்திய மனித சங்கிலி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஒன்றியத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மூலம் குழந்தைகளுக்கு உரிமை மற்றும் பாதுகாப்புக்காக மனித சங்கிலி நடைபெற்றது. விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினம் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு ஓம் சக்தி பாராமெடிக்கல் பயிலும் 300 மேற்பட்ட மாணவர்களை கொண்டு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த மனிதச் சங்கிலி மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல் தலைமை தாங்கினார்.ஓம்சக்தி பாராமெடிக்கல் கல்லூரியின் முதல்வர் கமலநாதன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் கலந்து கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து மனிதச்சங்கிலி தொடங்கிவைத்தார் .மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக சமூக நல விரிவாக்க அலுவலர் பரிமளா கலந்துகொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை எடுத்துரைத்தனர். முதுநிலை திட்ட மேலாளர் நம்பிராஜ்,திட்ட மேலாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக கோகிலா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய மேலாளர்கள் வேலு, அன்பரசு,பொண்ணு வேல்,கீதா, செல்வராஜ் மகாலட்சுமி, உதவி திட்ட மேலாளர் சிலம்பரசன்,கலைக் குழு மேலாளர்கள் செல்வம் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர் மாணவர்கள் குழந்தைகளுக்கு எதிரான வாசகத்தை முழக்கமிட்டும் மற்றும் வாசகத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு நின்றனர். இதனைப் இதனைத்தொடர்ந்து புழுதிவாக்கம் ஊராட்சியில் உள்ள இருளர் பகுதியில் பொங்கல் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்வில் அப்பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர் வெங்கட் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இளம் வயதில் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தாமல் இருக்க அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டது,அப்படி மீறி குழந்தைகளுக்கு குழந்தை திருமணத்தை நடத்தினால் அவர்களின் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து குழந்தை திருமணம் நடந்தால் 10 9 8 என்ற இலவச தொலைபேசி அழைக்க வேண்டுமென்று குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மேலாளர் மோகனவேல் தெரிவித்திருந்தார்
பின்னர் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ம.சசி
காஞ்சிபுரம் மாவட்ட நிருபர்