Police Department News

காவல்துறையை அறிவோம்

காவல்துறையை அறிவோம்

காவல்துறையின் தலைமை இயக்குனர்

இந்தியாவில் காவல்துறையின் தலைமை இயக்குநர் Director General of Police அல்லது காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் என்பது இந்தியக் காவல்துறையின் மிக உயரிய பதவியாகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். இவர்கள் பொதுவாக ஒரு மாநிலத்தில் காவல்துறைக்கு தலைமை வகிப்பர். ஆயினும் இவர்கள் சிறைத்துறை, குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை முதலிய மாநில அரசின் துறைகளின் தலைவர்களாகவோ அல்லது நடுவண் புலனாய்வுச் செயலகம், மத்திய சேமக் காவல் படை போன்ற நடுவண் அரசின் துறைகளிளோ பணியமர்த்தப்படலாம். அசோகச் சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து இப்பதவியின் சின்னமாகும்.

PSO1: மாநில காவல் படையானது காவல்துறை இயக்குனரின் பொது ஆளுகையின் கீழ் உள்ளது. அவருக்கு துணைபுரிய சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சில எண்ணிக்கையில் கூடுதல் காவல்துறை இயக்குநர்களும் மற்றும் சரகங்களின் மாவட்டங்களின் பொறுப்பில் உள்ள காவல்துறை துணை தலைவர்கள் மற்றும் சிறப்பு பணிகள் குற்றம் நுண்ணறிவு இருப்பூர்த்தி ஆயுதப்படை மது விலக்கு உணவு பொருள் தொழிலகப்பாதுகாப்பு நிர்வாகம் பயிற்சி & திட்டங்கள் பொறுப்பில் உள்ளவர்களும் உதவிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.