Police Department News

பரபரப்பாக பணியாற்றி மாட்டிய போலி பெண் போலீஸ்

பரபரப்பாக பணியாற்றி மாட்டிய போலி பெண் போலீஸ்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் வருவது வழக்கம். நேற்று அந்த கோயிலில் வழக்கம் போல மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
அப்போது பெண் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவர் மிகவும் பரபரப்பாக கூட்டத்தை ஒழுங்கப்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரை உள்ளூர் போலீஸார் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இதனால் சந்தேகமடைந்த உள்ளூர் போலீஸ் அவரிடம் சென்று பேசினர். அப்போது அவர் தான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், சிறப்புப் பணியாக இங்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவரது பேச்சில் சந்தேகமடைந்த போலீஸ், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்தப் பெண் திருப்பூர் மாவட்டம்,  வீரபாண்டியைச் சேர்ந்த ரீத்தா என்பது தெரியவந்தது.
சிறிய வயதில் இருந்தே அவருக்கு காவல்துறையில் பணியாற்றுவது கனவு. ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவரே காக்கி சீருடை அணிந்து களத்தில் இறங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதும், போலீஸ் அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.