Police Department News

ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி

ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசு 3-ம் ஆண்டில் அடிெயடுத்து வைத்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையி லும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மக்களுக்கு தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

ரேஷன் கடை களில் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.முதல் கட்டமாக சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

பழங்காலத்தில் சிறுதானியங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மறந்து விட்டனர். ஆனாலும் இப்போது டாக்டர்கள் அறிவுரையின் பேரில் மீண்டும் சிறுதானியத்தின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி உள்ளது. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்கும் திட்டம் தற்போது சோதனை முறையில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் சிறுதானியங்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்துதான் சிறுதானியங்களை வரவழைக்கிறோம்.

எனவே இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவு படுத்துவதற்கு தேவையான அளவு சிறுதானியங்கள் கையிருப்பு வேண்டும். அதன் பின்னர்தான் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த திட்டம் அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.