
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றி வருபவர் லெனின். இவர் அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது அப்துல் கனி உள்பட 4 பேர் பெண் போலீஸ் நிஷாந்தினி, அமலரூபம் ஆகியோரிடம் போக்சோ வழக்கு தொடர்பாக வந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடாது என்று வற்புறுத்தி கொண்டிருப்பதை பார்த்தார்.
இதனை கண்ட அவர் பெண் போலீசாரிடம் இவ்வளவு கடுமையாக பேசக்கூடாது என்று 4 பேரிடமும் கூறி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது பற்றி லெனின் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனி என்ப வரை கைது செய்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
