
அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் தவமணி. இவர் அரசு நில அளவை பிரிவில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதன் காரண மாக அவரது வீடு பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கும். அவ்வப் போது உசிலம்பட்டியில் உள்ள வீட்டுக்கு தவமணி வந்து செல்வார்.
இந்தநிலையில் சம்பவத் தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த நகை-பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலையில் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தவமணி வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடையந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
வீட்டில் யாரும் இல்லா ததால் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு உடனடியாக தெரிய வில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
