சாலையில் கிடந்த மணிபர்சை கண்ணியமாக காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!!!
அரியலூர் பங்களா சாலையில் யாரோ தவறவிட்ட ரூபாய் 2500 பணம் மற்றும் மணிபர்சை அந்த வழியாக வந்த அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச் சேர்ந்த பாரத் குமார் மற்றும் பிரேம்குமார் ஆகிய இரண்டு இளைஞர்களும் எடுத்து வந்து அரியலூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ரூபாய் 2500 பணம் மற்றும் மணிபர்ஸ் அரியலூர் கண்ணுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் அவரை நேரில் வரவழைத்து மணிபர்ஸ் ஒப்படைக்கப்பட்டது. மதிப்பு சிறிதெனினும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டு பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
