
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் B.6 காவல் நிலையத்திற்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய காவலர்கள். ரோந்துப்பணியில் ஈடுபட்டனர் அப்போது ஜீவா நகர் 2 வது தெருவில் உள்ள முருகன் ஸ்டோர்ஸ் என்ற பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது அங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது அவைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்ததில் கடை உரிமையாளர் அதே பகுதியில் வசித்து வரும் குருசாமி மகன் முருகன் வயது 54/24 என தெரிய வந்தது உடனே அவர் மீது கிரைம் நம்பர் 38/2024ன்படி u/s 6 (a) r/w 24(1) cotpa act & JJ act படி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
