
மருத்துவமனை பூட்டை உடைத்து ரூ.24 ஆயிரம் கொள்ளை
விருகம்பாக்கம், பாலாஜி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மனைவி சந்தியா. ஓமியோபதி டாக்டரான இவர் வீட்டின் கீழ் தளத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
சந்தியா இரவு மருத்துவ மனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் காலையில் வந்த போது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கம் ரூ.24 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
