ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்லால் மற்றும் போலீசார் ராமையா தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 13-வது சந்திப்பு அருகே பதுங்கியிருந்த சில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.
உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று பிடித்தனர். இதில் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். ஒருவர் தப்பி விட்டார்.
பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது 3 கத்திகள், கயிறுகள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த போலீசார் 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சோலையழகுபுரம் பகவதி அம்மன் கோவில் 3-வது தெரு சேகர் மகன் உமையாகுமார் என்ற பெரிய எலி (23), ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு பாண்டியன் குறுக்கு தெரு பாண்டி மகன் அருண் பாண்டி (23), சோலையழகுபுரம் முதல் தெரு ராமமூர்த்தி நகர் 4-வது தெரு மீனாட்சி சுந்தரம் மகன் சின்ன எலி (21), சோலைஅழகுபுரம் அன்வர் உசேன் மகன் அஜிஸ் (21), சோலையழகுபுரம் 3-வது தெரு ராஜேந்திரன் மகன் ஜீவானந்தம் என்ற சிவா (22) என்று தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.