Police Department News

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் கோர்ட்டு விசாரணையின் போது இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் கோர்ட்டு விசாரணையின் போது இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி

ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி ஆனந்தவள்ளி விசாரிக்க தொடங்கினார். அப்போது சாட்சி கூண்டில் நின்று கொண்டிருந்த வழக்கின் அப்போதைய விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை எதிர் கூண்டில் நின்ற கணேசன் அவதூறாக பேசி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையின் போது நீதிபதி முன்பு வைத்தே இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசிய கணேசனிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீசாரும், கணேசனிடம் இனி இந்த தவறு நடக்காது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.