Police Department News

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் 22 கிலோ கஞ்சா கடத்தல்- வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் 22 கிலோ கஞ்சா கடத்தல்- வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரெயில் தண்டையார்பேட்டை பகுதியில் மெதுவாக சென்றபோது 2 வாலிபர்கள் திடீரென குதித்து பெரிய பையுடன் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட மற்றொரு வாலிபரிடம் சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் 22 கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஹரிவரசன் என்பதும் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கூட்டாளி காமேஷ் என்பவரை தேடிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.