Police Department News

பைசுஅள்ளியில் வழக்கறிஞரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு.

பைசுஅள்ளியில் வழக்கறிஞரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பையாம்பட்டியானூரை சேர்ந்த வழக்கறிஞர் பாரதி (வயது.36),
இவருடைய உறவினர் செல்வராஜ் என்பவர் தர்மபுரி நீலாபுரத்தை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொகுசு கார் விற்பனை செய்ததாகவும் அது சம்மந்தமாக பிரச்சனை இருந்து வருவதாகவும் அதற்காக உதவும் படி கேட்டுக் கொண்டார்,
செல்வராஜ்பிரச்சனை குறித்து வழக்கறிஞர் பாரதி பைசு அள்ளியில் உள்ள பொது இடத்தில் வடிேவேலுவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்,
அப்போது வடிவேல் மற்றும் அவரது கூட்டாளிகளான பிடமனேரியை சேர்ந்த சேதுராமன் (வயது .30), காரைக்குடியை சேர்ந்த மதுபாலா (28) ஆகியோர் செல்வராஜூக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பாரதியை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர் பாரதி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.