சிறுவன் மீது பட்டாசு வீசிய தகராறில் நால்வர் கைது
மதுரையில் சிறுவன் மீது பட்டாசு வீசியதால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் வயது (40) இவர் பி.பி குளத்தில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கரும்பாலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா ஊர்வலம் பாண்டி செல்வனின் வீட்டின் அருகே வந்தது அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் வயது (25) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார்.அது பாண்டி செல்வத்தின் அண்ணன் மகன் கோகுல் அபினேஷ் மீது விழுந்து வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கவனமாக பட்டாசு வெடிக்குமாறு பாண்டி செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் மற்றும் அவரது நண்பர்களான அண்ணா நகரை சேர்ந்த சந்தன பாண்டி (26)ராஜபாண்டி (26) சர்க்கரை பாண்டி (25) ஆகியோர் பாண்டி செல்வத்தை கத்தியால் குத்தினர்.இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜ், சந்தன பாண்டி, ராஜபாண்டி, சர்க்கரை பாண்டி, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.