
தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்ற 2 பேர் கைது-636 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் கேசவராஜ்(வயது 51). இவர் அங்குள்ள சாலடியூர் சந்திப்பு பகுதியில் நின்று லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தர். அப்போது அங்கு வந்த போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயற்சித்தார்.
உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 460 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தென்காசி அருகே கீழப்புலியூரை சேர்ந்த சுடலையாண்டி(66) என்பவர் கையில் 176 லாட்டரி சீட்டுகளுடன் அந்த பகுதியில் நின்றார். அவரை தென்காசி போலீசார் கைது செய்து லாட்டரியை பறிமுதல் செய்தனர்.
