Police Recruitment

ரூ. 17 மட்டும் வைத்திருந்தவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ. 100 கோடி – சைபர் செல் சம்மனால் அதிர்ந்த கூலித் தொழிலாளி!

ரூ. 17 மட்டும் வைத்திருந்தவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ. 100 கோடி – சைபர் செல் சம்மனால் அதிர்ந்த கூலித் தொழிலாளி!

கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆனதை அடுத்து வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கம்.
முகமது விசாரணைக்காக நேரில் ஆஜராக தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது நசிருல்லா மண்டல் என்கிற தினசரி கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதை அடுத்து, அவரது வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது வீட்டு வசாலிலும் இதுகுறித்து சைபர் செல் துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கண்ட பிறகே தனது வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் இருப்பது முகமதுக்கு தெரியவந்துள்ளது.

வங்கி கணக்கில் திடீரென பணம் சேர்ந்தது தொடர்பாக விசாரணைக்காக வரும் 30ம் தேதிக்குள் ஆஜராகும்படி முகமதுவுக்கு தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து முகமது நசிருல்லா மண்டல் கூறுகையில், “காவல் துறையினரிடம் இருந்து அழைப்பு வந்ததும் எனக்கு தூக்கம் வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன். எனக்கு எதுவும் தெரியவில்லை.

எனது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மை தானா என நான் பலமுறை மறுபரிசீலனை செய்தேன். கணக்கு பரிவர்த்தனை பற்றி விசாரிக்க சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு பாஸ்புக்குடன் சென்றேன். வங்கி கணக்கு முடக்குவதற்கு முன்பு ரூ.17 இருந்ததாக கூறப்பட்டது. வங்கி கணக்கில் வெறும் ரூ.17 வைத்திருந்த நிலையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வங்கி கணக்கு நிறைந்துள்ளது” என்றார்

Leave a Reply

Your email address will not be published.