


பாலக்கோடு தாலுகா ஆபிசில் நடைப்பெற்ற ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட புலிகரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை ஆகிய பிர்காவிற்க்கு உட்பட்ட 42 வருவாய் கிராமங்களுகான ஜமாபந்தி நிகழ்ச்சி 4 நாட்களாக நடைப்பெற்று வந்தன,
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நஜ்ரி இக்பால் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் 285 மனுக்கள் பெறப்பட்டு 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
நில உரிமை சம்மந்தமான 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
கடைசி நாளான இன்று தாலுக்கா அலுவலக கூட்ட அரங்கில் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், சப் கலெக்டர் நஜீரிஇக்பால் கலந்துகொண்டு 70 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், பட்டா திருத்தம், இலவசவீட்டுமனைபட்டா ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓ.ஏ.பி. தாசில்தார் ரேவதி, வட்ட வழங்கல்அலுவலர்பழனி, துணை தாசில்தார்கள் சிவக்குமார், சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர்கள் ரவி, வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், மாதப்பன், மாதேஷ், சத்யா, முருகேசன், குமரன், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
