14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில் தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை நூற்பாலை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில் நூற்பாலையில் அதிரடியாக சோதனை செய்ததில் அங்கு பணியாற்றிய 14
குழந்தைகளை மீட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்
