தேனி
கம்பம் அருகே டிரோன் பறக்கவிட்டவர் கைது
மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்தது. அப்போது சின்னமனூரைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் டிரோன் கேமராவை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றார்.
டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து தெரித்து ஓடினர். எனவே இதுகுறித்து கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.