
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி செல்வம் (வயது 52).
இவர்கள் இருவரும் கடந்த 16-ந்தேதி பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே நெல்லை- தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சாலையின் குறுக்கே முயல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது பின்னால் அமர்ந்திருந்த வள்ளிசெல்வம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வள்ளி செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
