Police Recruitment

கடலூரில் இணையவழி குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

கடலூரில் இணையவழி குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரையின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு மேற்பார்வையில் இணையவழி குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கடலூர் தாலுக்கா அலுவலகத்தில் இணை யவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுஞ்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க்யை ஓபன் செய்ய கூடாது, செல்போன் பயன்பாட்டின் நன்மை தீமைகளை பற்றி விளக்கி கூறியும், இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணை யவழி குற்றம் தொடர்பாக இலவச உதவி எண் 1930 மற்றும் இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.