சென்னை பெருநகர காவல் குதிரைப்படைக்கு ஒரு மாத கால திறன் வளர்ப்பு பயிற்சி அளித்த நேஷனல் போலிஸ் அகாடமி, ஐதராபாத் பயிற்சியாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்
சென்னை பெருநகர காவல் குதிரைப்படையானது கடற்கரை ரோந்து பணி, குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்பு, முக்கிய பிரமுகர்களின் அணிவகுப்பு, பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணி மற்றும் இதர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் குதிரைப்படையை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களின் முயற்சியின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல், தேசிய காவல் உயர்பயிற்சியகத்தில் (National Police Academy) 30 ஆண்டுகளாக குதிரை பயிற்சி துறையின் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஆய்வாளர் திரு.வி.பாண்டியன் அவர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் சென்னை பெருநகர காவல் குதிரைப்படைக்கு ஒரு மாத காலமாக சிறப்பு பயிற்சியாக 30 குதிரைகளுக்கு, அணி வகுப்பு பயிற்சி மற்றும் ஆயத்தநிலை பயிற்சியும், குதிரைப்படை காவலர்களுக்கு சில நுணுக்கங்கள் நிறைந்த பயிற்சியும், அளிக்கப்பட்டது.
மேலும், குதிரைகளுக்கு விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், இப்படையில் உள்ள 12 குதிரைகள் தேசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் அளவுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருநகர காவல் படைக்கு பல நுணுக்கங்களுடன் கூடிய பயிற்சி அளித்த NPA குதிரைப்படை பொறுப்பு அதிகாரி ஆய்வாளர் திரு.வி.பாண்டியன் மற்றும் அவரது காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் நேற்று (05.12.2020) நேரில் அழைத்துப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியின்போது, கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஏ.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், காவல் துணைஆணையாளர்கள் (நுண்ணறிவு பிரிவு) திருமதி.S.விமலா மற்றும் திரு.ஶ்ரீதர் பாபு அவர்கள், குதிரை படை உதவி ஆணையாளர் (பொறுப்பு) திரு.ராஜகோபால் (போக்குவரத்து வண்ணாரப்பேட்டை) ஆகியோர் உடனிருந்தனர்.