
போக்குவரத்து சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஹலோ எப்.எம். சார்பில் 105 பென் டிரைவ்கள்
சென்னை மாநகர சாலைகளில் 105 போக்குவரத்து சந்திப்புகளில் மியூசிக் சிக்னல்கள் வசதி உள்ளது. இந்த சிக்னல்களில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்களுடன் இனிமையான பாடல்களும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஹலோ எப்.எம். சார்பில் மியூசிக் சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பென் டிரைவ்வுகள் தயாரித்து போக்குவரத்து போலீசாரிடம் வழங்ப்பட்டுள்ளன இது தொடர்பாக ஹலோ எப்.எம். 105 பென்டிரைவ்வுகளை வழங்கி இருக்கிறது. இதனை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று போக்குவரத்து போலீசாருக்கு வழங்கினார் இந்த பென் டிரைவ்களில் போக்குவரர்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல் வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
போதையில் பயணம் பாதையில் மரணம்.
செல் போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டாதீர்
சிக்னலை மீறி செல்லாதீர்.
நிறுத்தல் கோட்டை தாண்டி நிறுத்தாதீர்
என்பது போன்ற முக்கியமான விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
