கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு DGP உத்தரவு
கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதியளிப்பது கட்டுப்பாடுகள் தொடர்பான வழி காட்டுதல்களை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
கோவில் விழா குழுவினர்
ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் மாவட்ட எஸ்.பி.க்கள் கமிஷணர்கள் 7 நாட்களுக்குள் மனுவின் மீதான முடிவை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்
அனுமதி அளிக்கவோ மறுக்கவோ நடவடிக்கை இல்லையென்றால் விழாக்குழுவினர் 8 வது நாள் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து விட்டதாக கருதி நடத்தி கொள்ளலாம்
கோவில்களில் விழா தொடர்பான கலாச்சார நிகழ்ச்சிகள் மட்டுமே நடக்கிறது ஆபாசமான நடனங்கள் மற்றும் காட்சிகள் இல்லையென்பதை விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும் நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நீடிக்க கூடாது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் அவர்களை ஆபாச உடையில் சித்தரிக்கவோ வேறு இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது.
இரட்டை அர்த்த பாடல்கள் நிகழ்ச்சியில் இடம் பெறக்கூடாது. நிகழ்ச்சி நடைபெரும் இடத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மது அல்லது போதை பொருள் வினியோகம் செய்யக்கூடாது
நிபந்தனைகள் மீறப்பட்டால் அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்களே பொறுப்பு ஏற்க்க வேண்டும் அவர்கள் மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்
நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி.கள் மற்றும் கமிஷனர்கள் 7 நாட்களுக்குள் அனுமாதியளித்து விதிமுறைகளை அமுல் படுத்த வேண்டும் இது பற்றி தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
சென்னை உயர்நீதி மன்ற வழிகாட்டுதல்படி இந்த உத்தரவு பிறபிக்கப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.