Police Recruitment

பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 ஆயிரம் பணம் பறிப்பு

பேக்கரி உரிமையாளரை மிரட்டி 50 ஆயிரம் பணம் பறிப்பு

கல்லலில் பேக்கரி நடத்தி வருபவர் நாச்சியப்பன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் நாச்சியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மேலும் அவரிடமிருந்து சிலர் ரூ.50 லட்சம் பணம் மிரட்டி பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கடந்த 25. 01. 2022 ஆம் தேதி புதுக்கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட சிறுமியின் தாயார் தனது மகள் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வழக்குரைஞர் சி. பி. சி. ஐ. டி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதே சமயத்தில் இறந்த நாச்சியப்பனின் மனைவி சகுந்தலா தேவி தனது கணவர் நாச்சியப்பன் மீது பாலியல் குற்றம் சுமத்தி அவரிடமிருந்து ரூ. 50 லட்சம் பணத்தை ஏமாற்றி மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்டார் எனவும் இந்த வழக்கில் சி. பி. சி. ஐ. டி போலீசாருடன் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மதுரை சி. பி. சி. ஐ. டி டி. எஸ். பி பெலிக்ஸ் சுரேஷ் பீட்டருக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவரது தலைமையில் சிவகங்கை மாவட்ட சி. பி. சி. ஐ. டி இன்ஸ்பெக்டர் கீதாராணி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சகுந்தலா தேவி கொடுத்த புகாரில் கூறியபடி நாச்சியப்பனிடம் பணம் பெற்றது உண்மை என தெரியவந்தது. இந்த வழக்கில் கடந்த 30ம் தேதி முதல் கட்டமாக கல்லல் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் குணாளன் மற்றும் தேவகோட்டை பாலாஜி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரில் ஒருவரான கல்லல் அருகே கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டு சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.