
போலீசாருக்கு குளிர் மற்றும் மழை காலங்களில் பயன்படும் ஜெர்கின்களை வழங்கிய கோவை எஸ்பி அவர்கள்
கோவை மாவட்ட ஆயுதபடையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் கவாத்து சிறப்பாக முடிவுற்றதை தொடர்ந்து ஆயுதப் படையில் பணிபுரியும் அனைவருக்கும் குளிர்,மழை காலங்களில், பயன்படும் வகையில் தரமான Jerkin-களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்., இ.கா.ப., இன்று வழங்கினார்.மேலும், ஆயுதப்படையில் பணிபுரியும் ஒவ்வொரு காவலர்களின் குறைகளை பொறுமையாக கேட்டறிந்து அதன் மீது உடனடியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இத்தகைய நடவடிக்கை காவலர்களின் மத்தியில் மகிழ்வையும் நல்ல வரவேற்பையும் பெற்றது…
