

திருச்சியில் கோடை வெயிலில் இருந்து போலீசாரை பாதுகாக்க நிழற்குடை வழங்கிய டிஐஜி
திருச்சி சரக காவல் துணைத்தலைவர் A.சரவணசுந்தர், இ.கா.ப.,அவர்கள் தற்போதுள்ள வெயிலின்
தாக்கத்தினை கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி காவல் சரகத்தில் உள்ள 5 மாவட்ட போக்குவரத்து பிரிவினருக்கும்,
திருச்சிராப்பள்ளி – 9
கரூர் – 4,
புதுக்கோட்டை – 4,
அரியலுார் -2,
பெரம்பலூர்-3
மொத்தம் 22 நிழற்குடைகளை அந்தந்த மாவட்ட
போக்குவரத்து காவல் ஆய்வாளர்களிடம் கொடுத்து, போக்குவரத்து நெரிசல் அதிகம்
உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள், குடைகளை பயன்படுத்தி தாங்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொண்டு பணிபுரியுமாறு அறிவுரைகள் வழங்கினார்
