
வெள்ளி சந்தை 4 ரோட்டில் அனுமதி இன்றி கட்சி கொடி ஏற்றிய பாஜக Ex. MLA உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள வெலாம்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் வெள்ளி சந்தை 4 ரோடு பகுதியில நேற்று பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைத்து கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் பாஜக மாவட்ட தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இது சம்மந்தமாக வெள்ளிசந்தை வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி கொடுத்த புகாரில் எந்தவித அனுமதியும் இன்றி கட்சி கொடி கம்பம் அமைத்தது மற்றும் கட்சி கொடி ஏற்றியது தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (வயது.50), பாஜக மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு நிர்வாகி ஜெகதீசன் (வயது. 31), பாஜக ஒன்றிய தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
