மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் பெற்றுத்தந்த காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள்
23.01.2021 திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு மனைவியை கொலை செய்த சசிகுமார் என்பவர்க்கு கடந்த 19.01.2021 ம்தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி உயர்திரு.புருஷோத்தமன் அவர்கள் ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை பெறக்கூடும் என தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த வட்ட எழுத்தர் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் பாபு அவர்கள் நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.ஸ்டெல்லா மேரி மற்றும் நீதிமன்ற முதல் நிலை காவலர் திரு.பார்த்திபன் அவர்களையும் நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் மற்றும் விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.வீரசோலை அவர்கள் இணைந்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்.
