


மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது, நோய் வருவதற்கான அறிகுறிகள் மற்றும் நோய்வந்த பின்பு அதனை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள், நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கிற்க்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் .சாந்தி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெயந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கருத்தரங்கில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து இருதயம் சிகிச்சை நிபுணர் கண்ணன் மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர் வெங்கடேசன் மற்றும் மருத்துவர்கள் வருகை தந்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் சம்மந்தமான சந்தேகங்களுக்கு உரிய விளக்கமளித்து பேசினர்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி, மற்றும் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நோயாளிகள். பொதுமக்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் என
திரளானோர் கலந்து கொண்டனர்.
